ஒரே நாளில் 420 கோடி வசூல்

உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர். ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகள் இடையே வீரர்களை மாற்றிக் கொள்ளும் டிரான்ஸ்பர் முறையில் இவரை சமீபத்தில் இத்தாலியைச் சேர்ந்த ஜூவன்டஸ் அணி ரூ. 900 கோடி கொடுத்து அவரை விலைக்கு வாங்கியது. இந்த நிலையில், ஜூவன்டஸ் அணி கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயர் பொறிக்கப்பட்ட, 7ம் எண் கொண்ட ஜெர்சிகளை ஜூவன்டஸ் வெளியிட்டது.

அடிடாஸ் நிறுவனம் மூலம் இந்த ஜெர்சிகள் விற்பனைக்கு வந்துள்ளது.

வெளியான முதல் நாளிலேயே, 5,20,000 ஜெர்சிகள் விற்றுள்ளன. இதன் மூலம், ஜூவன்டஸ் அணிக்கு ரூ. 420 கோடி கிடைத்துள்ளது. இதன் மூலம் ரொனால்டோவுக்கு கொடுத்த பணத்தில் பாதியை அந்த அணி எடுத்துவிட்டது.இது முதல் நாள் விற்பனைதான். ரொனால்டோ ஜெர்சி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகெங்கும் உள்ள அடிடாஸ் ஷோரூம்கள் மூலம் 20 ஆயிரமும், ஆன்-லைன் மூலம் 5,00,000 ஜெர்சிகளும் விற்கப்பட்டுள்ளன. கடந்த 2016ல், ஜூவன்டஸ் 8,50,000 ஜெர்சிகளை விற்றுள்ளன.

அந்த சாதனையை அடுத்த சில நாட்களிலேயே முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing is caring!