ஒரே போட்டியால் முன்னேறிய இலங்கை வீரர்..!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரான இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில், டெஸ்ட் போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

இலங்கை அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 11-ஆம் திகதி துவங்கிய டிராவில் முடிந்ததால், டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதன் படி இப்போட்டியில் சதமடித்த பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் புள்ளிப்பட்டியலில் 4 நிலைகள் உயர்ந்து, 9-வது இடத்தில் உள்ளார். இதே போன்று இலங்கை அணியில் சதமடித்த தனஞ்சய டி சில்வா 8 இடங்கள் முன்னேறி 573 புள்ளிகளுடன் 35-வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய அணியின் தலைவரான கோஹ்லி 928 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்தின் கானே வில்லியம்சன் 864 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

மேலும் இலங்கை அணியின் திமுத் கருணரத்னே 725 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!