ஒலிம்பிக்கில் பங்கேற்கும் மெதில்டா கார்ல்சன்

இலங்கையில் பிறந்து சுவீடன் நாட்டவரால் தத்தெடுக்கப்பட்ட மெதில்டா கார்ல்சன் குதிரையேற்றத்தில் இவ்வருடம் இலங்கை சார்பாக ஒலிம்பிக் விழாவில் பங்கேற்கவுள்ளார்.

இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் விழாவில் பங்கேற்கும் முதல் இலங்கையர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் விழா எதிர்வரும் ஜூலை மாதம் ஜப்பானில் ஆரம்பமாகவுள்ளது.

இதில் இலங்கை சார்பாக போட்டியிடவுள்ள மெதில்டா கார்ல்சன் குதிரையேற்ற விளையாட்டில் இலங்கை சார்பாக ஒலிம்பிக் விழாவில் பங்குபற்றும் முதல் போட்டியாளராகவும் திகழ்கின்றார்.

இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு இலங்கை ஒலிம்பிக் இல்லத்தில் நேற்று (09) நடைபெற்றது.

இதன்போது, உலக நிரல்படுத்தலில் முதல் 100 இடங்களுக்குள் வர வேண்டும் என்பதே தனது பிரதான இலக்கு என மெதில்டா கார்ல்சன் குறிப்பிட்டார்.

Sharing is caring!