ஒலிம்பிக் விழாவில் எகிப்து அணிக்கு எதிரான கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி

இளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் எகிப்து அணிக்கு எதிரான கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றியீட்டியது.

இளையோருக்கான ஒலிம்பிக் விழா ஆர்ஜென்டினாவின் புவனோஸ் ஐரிஸில் நடைபெற்று வருகின்றது.

இதில் மகளிருக்கான கூடைப்பந்தாட்டத்தில் இலங்கை B குழுவில் போட்டியிடுகின்றது.

எகிப்துக்கு எதிரான போட்டியில் இலங்கை வீராங்கனைகள் 17 புள்ளிகளைப் பெற்றனர்.

எதிராளியான எகிப்து வீராங்கனைகளால் 15 புள்ளிகளையே பெற முடிந்தது.

இறுதியில் 17 – 15 எனும் புள்ளிகள் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இளையோருக்கான ஒலிம்பிக் விழா வரலாற்றில் கூடைப்பந்தாட்டத்தில் இலங்கை அணி ஈட்டிய முதல் வெற்றி இதுவாகும்.

இலங்கை மகளிர் கூடைப்பந்தாட்ட அணி அடுத்ததாக யுக்ரேன் மற்றும் வெனிசுவேலா ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ளது.

Sharing is caring!