ஒலிம்பிக் விழா இரத்து செய்யப்படலாம் – IOC

கொரோனா வைரஸை​க் கட்டுப்படுத்துவதற்கு முடியாமல்போகும் பட்சத்தில் ஒலிம்பிக் விழா இரத்து செய்யப்படும் என சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.

ஒலிம்பிக் விழாவை முன்னிலைப்படுத்தி அடுத்த மாதம் நடைபெறவிருந்த ஜப்பானின் தேசிய கால்பந்தாட்டத் தொடர்கள் சிலவும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ஒலிம்பிக் விழா எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஆகஷ்ட் மாதம் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸை​க் கட்டுப்படுத்துவதற்கு முடியாமல்போகும் பட்சத்தில் ஒலிம்பிக் விழா இரத்து செய்யப்படும் அல்லது காலம்தாழ்த்தி நடத்தப்படுவதற்கான சாத்தியம் நிலவுவதாக சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸினால் ஜப்பானில் இதுவரையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று (26) நடைபெறவுள்ளது.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ள போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Sharing is caring!