ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமைக்காக 17 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதம்

நியோர்க்கில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமைக்காக செரீனா வில்லியம்ஸ்க்கு அமெரிக்க டென்னிஸ் சங்கம் 17 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதித்துள்ளது . நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 6-2, 6-4 எனும் நேர் செட்டில் செரீனாவை வீழ்த்தி நவோமி ஒசாகா கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றிருந்தார்.

இந்த போட்டியின் போது நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரீனா மிகவும் கோபத்துடன் நடுவரை திட்டியதுடன் அவர் 3 விதிமுறை மீறலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.நடுவரை ஒரு பொய்யர் எனவும் தன்னுடையை புள்ளியை பறித்த அவர் ஒரு திருடர் எனவும் கோபத்தில் நடுவரை கடுமையான திட்டியுள்ளார்.

இந்நிலையில், செரீனாவின் இந்த நடவடிக்கைகளை கண்டித்துள்ள அமெரிக்க டென்னிஸ் சங்கம் அவருக்கு அபராதம் 17 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் விதித்து அறிவித்துள்ளது

Sharing is caring!