ஓப்பன் பேட்மிட்டன் அரையிறுதிப் போட்டியில் இந்தோனேஷிய வீராங்கனையை வென்று இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்

தாய்லாந்து ஓப்பன் பேட்மிட்டன் அரையிறுதிப் போட்டியில் இந்தோனேஷிய வீராங்கனையை வென்று இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதிப் போட்டியில் அவர் இந்தோனேஷிய வீராங்கனை கிரிகோரியா மரிஸ்கா தஞ்சங்கை எதிர்கொண்டார் இந்தப் போட்டியின் முதல் செட்டில் 23-21 என்ற புள்ளிக் கணக்கில் சிந்து வென்றாலும் இரண்டாவது செட்டை 16-21 என்ற புள்ளிக் கண்க்கில் பறிகொடுத்தார்.

இதையடுத்து நடைபெற்ற மூன்றாவது செட்டில் அதிரடியாக ஆட்டத்தைத் தொடர்ந்த பி.வி.சிந்து 21-9 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேஷிய வீராங்கனையை வீழ்த்தினார். நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஜப்பானிய வீராங்கனை நசோமி ஒகுஹராவை பி.வி.சிந்து எதிர்கொள்ள உள்ளார்.

Sharing is caring!