ஓய்வு நேரத்தில் கால்பந்து விளையாடி மகிழ்ந்த தோனி

மும்பை:
இந்தி நடிகர்களுடன் ஓய்வு நேரத்தில் கால்பந்து விளையாடி மகிழ்ந்துள்ளார் தோனி.

இந்திய கிரிக்கெட் அணி வீரரான மகேந்திர சிங் தோனி தனது ஓய்வு நேரத்தை பாலிவுட் நடிகர்களுடன் கால்பந்து விளையாடி பொழுதை கழித்தார். இந்திய கிரிக்கெட் அணி வீரரான தோனி, டெஸ்ட் போட்டியில் இருந்து கடந்த 2014ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

தற்போது இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில், தோனி ஓய்வெடுத்து வருகிறார். டெஸ்ட் அணியில் தோனி இல்லாததால், அவர் தனது ஓய்வு நேரத்தை கால்பந்து விளையாடி கழித்துள்ளார்.

கிரிக்கெட்டை தாண்டி கால்பந்து மீது அதிக ஆர்வம் கொண்ட தோனி, பாலிவுட் நடிகரும், தாதக் படத்தின் நாயகனுமான ஜான்வி கபூர் உடன் கால்பந்து விளையாடினார். தோனி, ஜான்வி கபூருடன் கால்பந்து விளையாடிய காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!