ஓய்வு முடிவை வாபஸ் பெற்றார் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்!

அனைத்து வகையிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த அம்பத்தி ராயுடு, தனது முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் 4-ஆவது இடத்தில் களமிறங்கி விளையாடி வந்தவர் அம்பத்தி ராயுடு.

இந்நிலையில், 2019 உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. அது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த 15 பேரில் யாரேனும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால், மாற்று வீரராக அம்பாத்தி ராயுடு இங்கிலாந்துக்கு செல்வார் எனஅறிவிக்கப்பட்டது.

அதேபோல், தவான், விஜய்சங்கர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்ட போது, ரிஷாப் பண்ட், மயங்க் அகர்வால் இங்கிலாந்துக்கு பறந்தனர். ராயுடுவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், விரக்தியின் உச்சத்திற்கு சென்ற அம்பத்தி ராயுடு, அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.

Sharing is caring!