கங்குலியை முந்தினார் விராட் கோலி

நியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.

போட்டியின் மூன்றாம் நாளான இன்று விராட் கோலி 11 ஓட்டங்கள் எடுத்தபோது, டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சவுரவ் கங்குலியை முந்தினார். அவர் 7,223 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

இந்த பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் 15,921 ஓட்டங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து, ராகுல் டிராவிட் 13,265 ஓட்டங்களுடனும், சுனில் கவாஸ்கர் 10,122 ஓட்டங்களுடனும், விவிவி எஸ்.லட்சுமண் 8,781 ஓட்டங்களுடனும், சேவாக் 8,503 ஓட்டங்களுடனும் உள்ளனர். விராட் கோலியை தொடர்ந்து சவுரவ் கங்குலி 7,212 ஓட்டங்களுடன் உள்ளார்.

Sharing is caring!