கண்டி டஸ்கர்ஸ் அணியில் இணைந்தார் ஸ்டெய்ன்

தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன், லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) க்காக கண்டி டஸ்கர்ஸ் உடன் இணைவார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

கண்டி அணிக்காக முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்ட மேற்கிந்தியத்தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அதேநேரம் கண்டி அணியின் மற்றொரு வீரரான பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் சோஹைல் தன்வீர் இலங்கைக்கு வந்த பின்னர் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டதையடுத்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந் நிலையிலேயே தன்வீருக்கு பதிலாக கண்டி அணியில் டேல் ஸ்டெய்ன் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அத்துடன் இந்த தகவலை டேல் ஸ்டெய்ன் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனும் ஸ்டெய்ன் தனிமைப்படுத்தல் காலம் காரணமாக தொடரில் சில போட்டிகளை இழக்க நேரிடலாம் என அணியின் முகாமையாளரும் பணிப்பாளருமான ஃபர்வீஸ் மஹாரூப் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!