கம்பீருக்கு 1 கோடி சம்பளத்தை பிசிசிஐ வழங்கியது

இந்திய அணியின் முன்னணி வீரராக திகழ்ந்த கவுதம் கம்பிரின் ஒட்டுமொத்த சம்பளத் தொகையை பிசிசிஐ வழங்கியுள்ளது.

இந்திய அணியின் முன்னணி துவக்க வீரர்களுள் ஒருவர் கவுதம் கம்பிர். தற்போது தேசிய அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார். இருப்பினும் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் கம்பிர்.

கம்பிர், கடைசியாக 2016ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடி இருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நவம்பர் மாதம் பங்கேற்றிருந்தார். கடைசியாக 2013ம் ஆண்டு ஒருநாள் போட்டியிலும், 2012ல் டி20 போட்டியிலும் விளையாடி இருந்தார்.

58 டெஸ்ட் போட்டிகளில் 4,154 ரன். சராசரி 41.95. 9 சதம் அடித்துள்ளார். 147 ஒருநாள் போட்டிகளில் 5,238 ரன். சராசரி 39.68. 11 சதங்கள் விளாசியிருக்கிறார். 37 டி20-களில் 932 ரன் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 119+.

இந்த நிலையில், 2011-12, 2012-13 மற்றும் 2014-15 சீசன்களில் இந்திய அணி போட்டிகளில் பங்கேற்றிருந்த கம்பிருக்கு, ஒட்டுமொத்த சம்பளத் தொகையான ரூ.1,04,24,507 கோடியை பிசிசிஐ வழங்கியிருக்கிறது.

தவிர, முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் ஜூனியர் அணி பயிற்சியாளருமான ராகுல் ட்ராவிட்டுக்கு, ஜூன் மாத தொழிற்முறை கட்டணமான ரூ. 40,50,000 லட்சத்தையும், டெஸ்ட் வீரர் புஜாராவுக்கு அக்டோபர் 2017 முதல் மார்ச் 2018 வரை ரூ.27,00,000 லட்சத்தையும் சம்பளமாக பிசிசிஐ வழங்கி இருக்கிறது.

Sharing is caring!