கராத்தே சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற இலங்கைக் குழாம் நாடு திரும்பியது

ஒன்பதாவது பொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற இலங்கைக் குழாம் இன்று (06) நாடு திரும்பியது.

இந்தப் போட்டிகளில் இலங்கை இரு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

ஒன்பதாவது பொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப், தென் ஆபிரிக்காவின் டேர்பன் நகரில் நடைபெற்றது.

இந்தப் போட்டிகளில் 20 நாடுகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.

கனடா, தென் ஆபிரிக்கா, நியூஸிலாந்து, இந்தியா, இங்கிலாந்து, பொட்ஸ்வானா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகள் அதில் உள்ளடங்குகின்றன.

இலங்கையிலிருந்து 18 வீரர்களும் 3 வீராங்கனைகளும் போட்டியிட்டனர்.

இலங்கையின் அரோஷ் சமரவிக்ரம மற்றும் ரமித் வீரசிங்க ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!