கலதுறை வீரரான ட்வெய்ன் பிரேவோ சர்வதேசப் போட்டிகளில் ஓய்வு

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான ட்வெய்ன் பிரேவோ (Dwayne Bravo) சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.

35 வயதான பிரேவோ கடைசியாக 2014 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் விளையாடினார்.

பிராவோ டெஸ்டில் 2,200 ஓட்டங்களும், 86 விக்கெட்களும் எடுத்துள்ளார். ஒரு நாள் போட்டியில் 2968 ஓட்டங்களும், 199 விக்கெட்களும், 20 ஓவரில் 1142 ஓட்டங்களும், 52 விக்கெட்களும் எடுத்துள்ளார்.

சர்வதேசப் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் பல்வேறு நாடுகளிலும் நடைபெறும் உள்ளூர் 20 ஓவர் போட்டிகளில் பிரேவோ விளையாடவுள்ளார்.

Sharing is caring!