கலாநிதி ஆர்.எல். ஹேமன் கிண்ண வோட்டர் போலோ போட்டி – கொழும்பு ரோயல் கல்லூரி அணி சாம்பியன்

கலாநிதி ஆர்.எல். ஹேமன் கிண்ண வோட்டர் போலோ போட்டியில் கொழும்பு ரோயல் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை சூடியது.

இரண்டு கட்டங்களின் முடிவில் 16 -15 எனும் கோல் கணக்கில் கல்கிசை புனித தோமஸ் கல்லூரி அணி தோல்வியடைந்தது.

கொழும்பு ரோயல் மற்றும் கல்கிசை புனித தோமஸ் கல்லூரி அணிகளுக்கிடையிலான வருடாந்த வோட்டர் போலோ போட்டி கொழும்பு சுகததாஸ நீச்சல் தடாகத்தில் இன்று நிறைவுக்கு வந்தது.

கலாநிதி ஆர்.எல் ஹேமன் கிண்ணத்திற்கான இந்தப் போட்டி 27 ஆவது ஆண்டாக இம்முறை நடத்தப்பட்டது.

இரண்டு கட்டங்களைக் கொண்ட போட்டியின் முதல் கட்டம் கடந்த வாரம் இடம்பெற்றதுடன், அதனை 9 – 7 எனும் கோல் கணக்கில் ரோயல் கல்லூரி அணி தம்வசப்படுத்தியது.

இரண்டாம் கட்டம் இன்று நடைபெற்றதுடன், இரண்டு அணிகளின் வீரர்களும் சவாலாக விளையாடினார்கள்.

இறுதி வரை மிகவும் விறுவிறுப்பாக நீடித்த இரண்டாம் கட்டத்தை 8 -7 எனும் கோல் கணக்கில் தோமஸ் அணி தனதாக்கியது.

எவ்வாறாயினும், இரண்டு கட்டங்களில் 16- 15 எனும் கோல் கணக்கில் முன்னிலை பெற்ற ரோயல் கல்லூரி அணி இவ்வருட சாம்பியனாக மகுடம் சூடியது.

அதற்கமைய, கலாநிதி ஆர்.எல் ஹேமன் கிண்ணம் 5 வருடங்களின் பின்னர் ரோயல் கல்லூரி வசமானது.

Sharing is caring!