“கல கலனு ஊரு”…ஹர்பஜன் வாழ்த்து

இன்று சென்னையின் 379வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. மெட்ரேஸ் டேவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை தினத்தையொட்டி பல திரையுலக மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் தங்களுக்கும் சென்னைக்குமான உறவுகள், சென்னையின் சிறப்பம்சங்கள் என சமூக வலைதளங்கள் முழுவதும் சென்னை புகழ் பாடிவருகின்றனர்

— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 22, 2018 

இந்நிலையில் கிரிக்கெட் தமிழ் புலவர் ஹர்பஜன்சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “ இதுகல கல னு ஊரு கெத்தா மெட்ராஸ் சிட்டி னு பேரு! பரபரப்ப பாரு இங்க மக்கள் கூட்டம் ஜோரு… ஐபில் னு அந்த பக்கம் வந்தோம் ஒரு நாளு அது செம தாறு மாறு… என்னைக்கும் எங்களுக்கு சென்னை ஒரு தாய் வீடு தான்! இன்னக்கி ஊருக்கு 379வது பிறந்தநாள்… வாழ்த்துக்கள் சொல்லிக்குறேன்” என அடுக்குமொழியில் ரைமிங்கான பதிவை பதிவிடுள்ளார்.

Sharing is caring!