காதல் மனைவிக்காக கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி ஊருக்கு திரும்பிய முன்னணி வீரர்

அவுஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் தனது மனைவிக்காக தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து நடுவில் விலகி ஊருக்கு திரும்பியுள்ளார்.

மிட்செல் ஸ்டார்க் – அலிசா ஹீலி, அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜோடி ஆவர்.

மிட்செல் ஸ்டார்க் ஆடவர் அணியின் வேகப் பந்துவீச்சாளர். அவரின் காதல் மனைவி அலிசா ஹீலி மகளிர் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்வுமன் ஆவார்.

தற்சமயம் சிறந்த பார்மில் உள்ள அலிசா அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை தொடரில் ஆடி வருகிறார்.

இதன் இறுதிப் போட்டி மெல்போர்னில் வரும் 8ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில் அதில் இந்தியா – அவுஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் அந்த அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலியா ஆடும் நிலையில், தன் மனைவிக்காவும் அவ ஆடும் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவதை நேரில் காண வேண்டும் எனவும் ஆவலில் இருந்த மிட்செல் ஸ்டார்க், தென்னாப்பிரிக்க தொடரில் பாதியில் இருந்து கிளம்பி ஊருக்கு திரும்பியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க – அவுஸ்திரேலியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா ஏற்கனவே 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!