காயம்… இன்றைய போட்டியில் பங்கேற்பாரா தோனி?

ஐதராபாத்:
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் தோனி பங்கேற்பாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை 2-0 என்று கைப்பற்றியது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. ஹைதராபாத் ராஜிவ்காந்தி மைதானத்தில் முதல் போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.

இந்நிலையில் இந்திய வீரர்கள் மைதானத்தில பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேட்ச் பிடிக்கும் பயிற்சியின்போது பந்து தோனியின் வலது முன்கையில் வேகமாக பட்டது. இதனால் தோனி வலியால் துடித்தார்.

பின் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஓய்வு எடுக்கச் சென்றார். அதன்பின் அவர் பயிற்சியில் ஈடுபடவில்லை. காயத்தின் தன்மை குறித்து இன்னும் தெரியாத நிலையில், இன்றைய போட்டியில் தோனி பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

ஒருவேளை தோனி ஆட முடியாவிட்டால் அவருக்கு பதிலாக ரிஷப்பந்த் களமிறங்குவார். அல்லது கே.எல். ராகுலுக்கு விக்கெட் கீப்பிங் அளிக்கப்பட்டு, ராயுடு களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!