கார்பீல்ட் சோபர்ஸ் விருதை வென்றார் பென் ஸ்டோக்ஸ்

சர்வதேச கிரிக்கெட் பேரவை திறமையான வீர, வீராங்கனைகளை வருடாந்தம் தெரிவு செய்து விருது வழங்கி கௌரவிக்கின்றது.

2019 ஆம் ஆண்டில் வீரர்கள் வெளிப்படுத்திய ஆற்றல்களின் பிரகாரம், ஆண்டின் அதிசிறந்த கிரிக்கெட் வீரருக்கான சேர் கார்பீல்ட் சோபர்ஸ் விருது (Sir Garfield Sobers ) இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் வசமானது.

ஆண்டின் அதிசிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதிற்கு அவுஸ்திரேலியாவின் பெட் கமின்ஸ் ( Pat Cummins) பாத்திரமானார்.

ஆண்டின் அதிசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருது இந்தியாவின் ரோஹித் சர்மாவுக்கு கிட்டியது.

சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் அதிசிறந்த ஆற்றலை வெளிப்படுத்திய வீரராக இந்தியாவின் தீபக் சஹாருக்கு (Deepak Chahar) பரிசளிக்கப்பட்டது.

ஆண்டின் வளர்முக கிரிக்கெட் வீரராக அவுஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன் (Marnus Labuschagne) பெயரிடப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டில் தாற்பரியமிக்க கிரிக்கெட் வீரராக இந்திய அணித்தலைவரான விராட் கோஹ்லி தெரிவு செய்யப்பட்டார்.

ஆண்டின் அதிசிறந்த நடுவருக்கு பரிசளிக்கப்படும் டேவிட் ஷெபர்ட் விருதிற்கு இங்கிலாந்தின் ரிச்சர்ட் இலிங்வர்த் (Richard Illingworth) தெரிவாகியுள்ளார்.

Sharing is caring!