காலியுடன் பரபரப்பான மோதல்..இறுதிப் போட்டியில் சம்பியனானது ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி..!!

லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு இருபது தொடரில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் தொடர் கடந்த நவம்பர் 26ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த நிலையில் இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது.இறுதிப் போட்டியில் காலி கிளாடியேற்றர்ஸ் மற்றும் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணிகள் மோதியிருந்தன.

இன்று இரவு காலி கிளாடியேட்டர்ஸ் அணியை 53 ஓட்டங்களால் வீழ்த்தி கிண்ணத்தை வென்றனர்.அதிகமாக ஒரு தலைப்பட்டசமாக ஆட்டம் அமைந்தது, இரசிகர்களிற்கு சுவாரஸ்ய குறைவை ஏற்படுத்தினாலும், பெருந்தொற்றின் போது வெற்றிகரமான தொடர் நடத்தி முடிக்கப்பட்டதில் திருப்தியடையலாம்.

மற்றும்படி, யாழ்ப்பாண அணியென கூறப்பட்ட போதும், இறுதிப் போட்டி, அரையிறுதி போட்டிகளில் எந்த வடக்கு, தமிழ் வீரரும் ஆடவில்லை. இதனால் தொடர், தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தவில்லை. வெற்றிக்கூட்டணியொன்று களமிறக்கப்பட்டதாக, வழக்கமான கிரிக்கெட் காரணம் கூறப்பட்டாலும், அந்த பிராந்திய வீரர்களும் இணைக்கப்பட்டு, அவர்களையும் கொண்ட அணியின் பலத்துடன் களமிறங்குவதே நியாயமானது. தற்போதைய அணிச்சேர்க்கை, அணி நிர்வாகத்திற்கு உதவலாம். ஆனால், வடக்கு கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவாது.

இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.அணிசார்பாக, சொய்ப் மலிக் 46 ஓட்டங்களையும், திசர பெரேரா ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் தனஞ்சய லக்சன் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.இந்நிலையில், பதிலுக்கு 189 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய காலி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்நிலையில் 53 ஓட்டங்களால் காலி அணி தோல்வியடைந்தது.

அணிசார்பாக, பானுக ராஜபக்ச 40 ஓட்டங்களையும் அசம் கான் 36 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.காலியின் விரட்டலில் சுவாரஸ்யமே இருக்கவில்லை. தனுஷ்க குணதிலகவின் புண்ணியத்தில் இறுதிக்கு எட்டிப்பார்த்த திருப்தியுடன் விடைபெற்றார்கள்.சொகைப் மாலிக், உஸ்மான் சின்வாரி தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.பந்துவீச்சில், உஸ்மன் சின்வாரி மற்றும் சொய்ப் மலிக் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!