காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை அகற்ற நடவடிக்கை

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (21) காலை 10.00 மணிக்கு காலி பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளதாக காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார்.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் இதுவரையில் எந்தவித தீர்மானத்தையும் எடுக்கவில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ள கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் டாக்டர் ரமேஷ் பதிரன எம்.பி. குறிப்பிட்டுள்ளார்

Sharing is caring!