கால்பந்தாட்ட தரப்படுத்தலில் பெல்ஜியம் முதலிடம்

சர்வதேச கால்பந்தாட்ட அணிகளின் புதிய தரப்படுத்தலில் பெல்ஜியம் அணி 1765 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றுள்ளது.

கால்பந்தாட்ட அரங்கில் நடப்பு உலக சாம்பியனாக திகழும் பிரான்ஸ் அணி 1733 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரையில் ஐந்து தடவைகள் உலக சாம்பியனாக மகுடம் சூடியுள்ள பிரேசில் அணிக்கு புதிய தரப்படுத்தலில் மூன்றாமிடம் கிடைத்துள்ளது.

மேலும், உலகக்கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் அதிகூடிய உலகக்கிண்ணங்களை சுவீகரித்துள்ள அணி என்ற சிறப்பு பெயரையும் பிரேசில் பெற்றுள்ளது.

ஹெரி கேன் தலைமையிலான இங்கிலாந்து அணி 1661 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

உருகுவே , குரோஷியா, போர்த்துக்கல் ஆகிய அணிகள் முறை​யே ஐந்தாம் ஆறாம் ஏழாம் இடங்களில் நீடிக்கின்றன.

முன்னாள் சாம்பியனான ஸ்பெய்ன் அணி 1636 புள்ளிகளுடன் எட்டாமிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

1623 புள்ளிகளைப் பெற்றுள்ள ஆர்ஜென்டினா அணி ஒன்பதாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 205 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்த இலங்கை அணி ஓர் இடம் பின்தங்கியுள்ளது.

Sharing is caring!