கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் மாற்றம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் ‘பஞ்சாப் கிங்ஸ்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8 அணிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாபும் ஒன்று. இதுவரையான 13 ஐபிஎல் தொடர்களில் ஒரு முறை இறுதி ஆட்டம் வரை சென்றது.

மற்றொரு முறை 3-வது இடத்தைப் பிடித்தது. கடந்த ஐபிஎல் தொடரின் புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் அணி 6-வது இடத்தைப் பிடித்தது.

இந்த நிலையில், 14-வது ஐபிஎல் தொடர் ஏப்ரல் 2-வது வாரம் தொடங்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இதனிடையே, பஞ்சாப் அணி நிர்வாகம் தங்கள் அணியின் பெயரை மாற்றியது தொடர்பில் பிசிசிஐ வட்டாரம் விளக்கமளித்துள்ளது.

அதில், நீண்ட நாட்களாகப் பெயரை மாற்ற அணி நிர்வாகம் யோசித்து வருகிறது. இந்த ஐபிஎல் தொடருக்கு முன் பெயரை மாற்ற நினைத்தனர். எனவே, இது திடீர் முடிவல்ல என குறிப்பிட்டுள்ளனர்.

Sharing is caring!