கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் : ஐ.சி.சி. அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. புதிய விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளது.  புதிய விதிமுறைகளின்படி, காயம் காரணமாக வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், மாற்று வீரர் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், போட்டியில் ஒரு அணி தாமதமாக பந்து வீசினால் அனைத்து வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது. ஒரு போட்டியில் தாமதமாக பந்து வீசினால் இதுவரை அணியின் தலைவருக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய விதிமுறைகளுக்கு எந்தளவிற்கு வரவேற்பு இருக்கும் என்பது போகபோகத்தான் தெரியும்.

Sharing is caring!