கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு! ஏன் தெரியுமா..?

தமிழக வீரர் நடராஜன் இதுவரை விளையாடியுள்ள ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர் பற்றி சச்சின் டெண்டுல்கர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் உரையாடுகையில், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய நடராஜனை டெஸ்ட் தொடரிலும் சேர்ப்பது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த டெண்டுல்கர், இதுவரை விளையாடிய ஆட்டங்களில் நடராஜன் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரை அணியில் தெரிவு செய்வது தேர்வுக் குழுவினர் மற்றும் அணி நிர்வாகத்திடம் உள்ளது.

இதுபற்றி முடிவெடுப்பதில் அவர்கள்தான் சரியான இடத்தில் உள்ளனர் என்றார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் நடராஜன் 4 ஆட்டங்களில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேலும், தொடர் நாயகன் விருதுக்கு நடராஜன் தகுதியானவர் என டி20 தொடரில் விருது வென்ற ஹார்திக் பாண்டியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!