கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு… இந்திய அணி வீரர்கள் முன்னணி

புதுடில்லி:
தரவரிசை பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்தான் முன்னணியில் உள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டித் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் வரிசையில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி 887 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரோஹித் சர்மா 854 புள்ளிகள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளனர்.

ஷிகர் தவான் (744) 10-வது இடம் பெற்றார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 3 அரைசதம் விளாசிய தோனி(688) 3 இடங்கள் முன்னேறி 17-வது இடம் பெற்றார். நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் 3, இங்கிலாந்து ஜோய் ரூட் 4, பாகிஸ்தான் பாபர் ஆஸம் 5, தெ. ஆப்பிரிக்கா டூ பிளசிஸ் 6, மே.இ.தீவுகள் ஷாய் ஹோப் 7, தெ.ஆப்பிரிக்கா குயின்டன் டி காக் 8, பாகிஸ்தானின் பக்கர் ஜமான் 9 ஆகியோர் இடம் பெற்றனர்.

பந்துவீச்சாளர்களில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 808 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். குல்தீப் யாதவ் 719 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், 709 புள்ளிகளுடன் யஜுவேந்திர சாஹல் ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்திலும் உள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 12 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட் 3-வது இடத்துக்கு முன்னேறினார். 2-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானும், கேதார் ஜாதவ் 8 இடங்கள் முன்னேறி 35-வது இடத்திலும் உள்ளனர். வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் 6, தென் ஆப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடா 7, இங்கிலாந்து வீரர் அடில் ரஷித் 8, முஜிப் ரஹ்மான் 9, ஜோஷ் ஹேசல்வுட்10 உள்ளனர்.

ஆல்ரவுண்டர்கள் வரிசையில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்கள் இடம் பெறவில்லை. அணிகளில் இங்கிலாந்து 126 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்தியா 122 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தலா 111 புள்ளிகள் பெற்று 3, 4, பாகிஸ்தான் 102 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளது. ஆஸ்திரேலியா 100 புள்ளிகளுடன 6-வது இடத்தில் உள்ளது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!