கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் அம்பதி ராயுடு!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் தற்போது நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அம்பதி ராயுடுவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதுகுறித்து அவர் தனது அதிருப்தியையும் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் உலகக்கோப்பை இந்திய அணியில் ஷிகர் தவான் மற்றும் விஜய்சங்கர் ஆகிய இரு வீரர்கள் காயமடைந்து, புதிய வீரர்கள் சேர்க்கப்பட்ட சூழ்நிலையில் கூட, அம்பதி ராயுடுவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இந்நிலையில்,  மூன்று முறை வாய்ப்பு இருந்தும் தனக்கு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று விரக்தியில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அம்பதி ராயுடு இன்று அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த அம்பதி ராயுடு, 55 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 டி-20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 1,736 ரன்களை எடுத்துள்ளார்.

இதற்கிடையே ஐஸ்லாந்தின் நிரந்தர குடிமக்களுக்கான உரிமையை ராயுடு பெற்றுள்ளார் என்ற செய்தி நேற்று வெளியாகியது. அதுமட்டுமின்றி, தங்களது நாட்டுக்காக கிரிக்கெட் விளையாட முன்வர வேண்டும் என்று ஐஸ்லாந்து நாடு தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ராயுடுவுக்கு வேண்டுகோள் விடுத்து செய்தி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!