கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலியா சவாலாக ஆரம்பித்துள்ளது

இலங்கைக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலியா சவாலாக ஆரம்பித்துள்ளது.

பிரிஸ்பேனில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 144 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

அதிகபட்சமாக நிரோஷன் திக்வெல்ல 64 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் பெட் கமின்ஸ் 4 விக்கெட்களையும் ஜே ரிச்சர்ட்ஸன் 3 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இதன்போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியா சார்பாக 200 விக்கெட்களை வீழ்த்திய வீரராக மிச்செல் ஸ்டார்க் பதிவானார்.

பதிலளித்தாடும் அவுஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 72 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஜோ பேர்ன்ஸ் 15 ஓட்டங்களுடனும் உஸ்மான் கவாஜா 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

சுரங்க லக்மால், டில்ருவன் பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

Sharing is caring!