கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்…உலகக்கோப்பை போட்டியில் இருந்து ஸ்டெயின் விலகல்

தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் விலகியுள்ளார்.

2019 உலகக்கோப்பை தொடர், இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், தென்னாப்பிரிக்கா அணி இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இதனால் அந்த அணி நாளை இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

இந்த நிலையில், தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து தென்னாப்பிரிக்கா அணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் விலகுவதாக, அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக அந்த அணியில் பியூரான் ஹெண்ட்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி  நாளை  நடக்க உள்ள நிலையில் ஸ்டெயின் விலகியுள்ளது, தென்னாப்பிரிக்கா அணிக்கு பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

Sharing is caring!