கிரிக்கெட் வீரர்களே ஜாக்கிரதை… ஐசிசி டுவிட் இணையத்தில் ஆகுது வைரல்

புதுடில்லி:
ஜாக்கிரதை… கிரீஸிலிருந்து காலை எடுக்காதீர்கள் என்று ஐசிசி பதிவிட்டுள்ள டுவிட்தான் தற்போது வைரலாகி வருகிறது. என்ன விஷயம் தெரியுங்களா?

ஸ்டெம்புக்கு பின்னால் தோனி நிற்கும்போது பேட்ஸ்மேன்கள் யாரும் கிரீஸிலிருந்து காலை எடுக்காதீர்கள் என ஐசிசி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவு இணையத்தில் மிகுந்த கவனத்தை பெற்றுவருகிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி, கிரீஸைவிட்டு வெளியே வந்த நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீசமை, கண் இமைக்கும் நேரத்திற்குள் ரன் அவுட் ஆக்கினார்.

இந்நிலையில் ஜப்பானைச் சேர்ந்த ஒருவர், தங்களுக்கு ஏதாவது கிரிக்கெட் அறிவுரை இருந்தால் கொடுங்கள் என ஐசிசியின் டுவிட்டர் பக்கத்தில் கேட்டார். இதற்கு ஐசிசி, ஸ்டெம்பிற்கு பின்னால் தோனி நிற்கும்போது, பேட்ஸ்மேன்கள் யாரும் கிரீஸை விட்டு காலை எடுக்காதீர்கள் என பதில் அளித்திருந்தது.

ஐசிசியின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!