கிரிஸ்டல் பேலஸை வீழ்த்தியது லிவர்பூல்

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், பலம்வாய்ந்த லிவர்பூல் அணி, கிரிஸ்டல் பேலஸை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது தொடர் வெற்றியை பதிவு செய்தது.

முதல் போட்டியில் 4-0 என வெஸ்ட் ஹேம் அணியை வீழ்த்தியிருந்த லிவர்பூல், பிரீமியர் லீக்கின் இரண்டாவது வாரத்தின் கடைசி போட்டியில் கிரிஸ்டல் பேலஸை சந்தித்தது. முன்னாள் இங்கிலாந்து தேசிய அணி பயிற்சியாளர் ராய் ஹாட்ஜ்சன் தலைமையில், வில்ப்ரெட் சாகா, பென்டேகே, ஆண்ட்ராஸ் டவுன்சென்ட் போன்ற முக்கிய வீரர்களோடு லண்டனில் உள்ள தங்களது செல்ஹர்ஸ்ட் பார்க் மைதானத்தில் களமிறங்கியது கிரிஸ்டல் பேலஸ்.

சாலா,  மானே, பிர்மீனோ ஆகியோர் தலைமையில் மின்னல் வேக அட்டாக்கை கொண்ட லிவர்பூல் அணி, கிரிஸ்டல் பேலஸ் டிபென்ஸுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தது. ஒரு சில நல்ல வாய்ப்புகள் உருவாக்கப்பட்டாலும், அதை கிரிஸ்டல் பேலஸ் வீரர்கள் தடுத்தனர். முதல் பாதி கோல் இல்லாமல் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நிமிடத்தில், கிரிஸ்டல் பேலஸ் வீரர் ஆன்ஹோல்ட், லிவர்பூல் நட்சத்திர வீரர் சாலாவை பிடித்து இழுத்து பவுல் செய்தார். லிவர்பூலுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில், ஜேம்ஸ் மில்னர் கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் 1-0 என லிவர்பூல் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் மீண்டும் வேகமாக அட்டாக் செய்தது லிவர்பூல் அணி. 75வது நிமிடத்தில், கிரிஸ்டல் பேலஸ் டிபென்ஸை தாண்டி பந்தை கடத்தி சென்ற சாலாவை, அந்த அணியின் பிஸாகா பவுல் செய்தார். இதனால் அவருக்கு ரெப்ரீ ரெட் கார்டு வழங்கினார். 90+3வது நிமிடம், போட்டி முடியும் தருவாயில் லிவர்பூலின் சாடியோ மானே கோல் அடிக்க, 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது லிவர்பூல்.

Sharing is caring!