குங்பூ போட்டியில் பிரான்ஸ் நாட்டு வீரர் வெற்றி

மாமல்லபுரம்:
பிரான்ஸ் நாட்டு குங்பூ வீரர் வெற்றிப் பெற்று கறுப்பு பட்டை பெற்றுள்ளார்.

மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி பகுதியில், மன்சூரியா குங்பூ இன்டர்நேஷனல் தற்காப்புக்கலை பயிற்சியகம் இயங்குகிறது.
நாட்டின் பல பகுதியினர் இங்கு வந்து குங்பூ பயிற்சி பெற்று, சர்வதேச நாடுகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று, பலவகை பட்டை அங்கீகாரம் பெறுவர்.

இந்நிலையில் இந்த பயிற்சியகத்தின் றுவனர் சேகர் நினைவு நாள் போட்டி நடந்தது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வீரர் மேத்யூ டெரோசியர் பங்கேற்று வெற்றி பெற்றார்.

இவருக்கு பயிற்சியக தலைவரும், ம.தி.மு.க., துணை பொதுச்செயலருமான மல்லை சத்யா உள்ளிட்டோர், ஏழாம் கறுப்பு பட்டை அங்கீகாரம் வழங்கி கவுரவித்தனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!