குத்துச்சண்டை கோதாவில் ரஷ்யாவின் கபீப் நமாகெமேடோவ் (Khabib Nurmagomedov) சம்பியனானார்

மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த யு.எவ்.சி. குத்துச்சண்டை கோதாவில் ரஷ்யாவின் கபீப் நமாகெமேடோவ் (Khabib Nurmagomedov) சம்பியனானார்.

இதற்கான இறுதிப்போட்டியில், அயர்லாந்தின் கோனர் மெக்கிரகரை தோல்வியடைந்தார்.

சர்வதேச குத்துச்சண்டை அரங்கில் யு.எவ்.சி. கோதா முக்கியத்துவம் பெறுகின்றது.

உலகின் அதிபாரமிக்க நட்சத்திர குத்துச்சண்டை வீரர்கள் இந்த கோதாவில் கலந்துகொள்கின்றமையே அதற்கான காரணமாகும்.

இவ்வருட கோதாவின் இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் கபீப் நமாகெமேடோ மற்றும் அயர்லாந்தின் கோனர் மெக்கிரகரை ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

கோதாவுக்காக இறுதிப்போட்டி அமெரிக்காவின் லொஸ் வேகாஸில் நடைபெற்றது.

கோதாவின் முதல்சுற்றை கபீப் நமாகெமேடோவ் வெற்றிகொண்டார்.

கோதாவின் நான்காவது சுற்றில் கோனர் மெக்கிரகரை வீழ்த்தி, கபீப் நமாகெமேடோவ் சம்பியன் மகுடத்தை சூடினார்.

3 நிமிடங்கள் மற்றும் 3 செக்கன்களில் கோதாவின் இறுதிச்சுற்றில் கோனர் மெக்கிரகரை வீழ்த்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யு.எவ்.சி. குத்துச்சண்டை கோதாவில் ரஷ்யாவின் கபீப் நமாகெமேடோவ் வெற்றிகொள்ளும், தொடர்ச்சியான ஏழாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி நியூயோர்க்கில் நடைபெற்ற யு.எவ்.சி. கோதாவிலும் அமெரிக்காவின் அலெக் ஷான்டர் ஜேவை , கபீப் நமாகெமேடோவ் வீழ்த்தியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Sharing is caring!