குத்துச் சண்டையில் எதிரிகளை எளிதில் வீழ்த்தினாலும் விளையாட்டு வளையத்திற்கு வெளியிலும் போராடும் ஒரு பெண்.!!

ஜேர்மனியின் Zeina Nassar (21), ஒலிம்பிக் கனவில் வாழும் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை. இணையத்தில்  குத்துச்சண்டை வீடியோக்களைப் பார்த்து ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட Zeina, இதுவரை தான் பங்கேற்ற 24 அதிகாரப்பூர்வ போட்டிகளில் 18இல் வென்றவர்.ஒவ்வொரு போட்டியிலும் இரண்டு முறை நான் ஜெயிக்க வேண்டியதாக இருந்தது என்கிறார் Zeina, ஏனென்றால், ஒன்று நான் ஒரு பெண் என்பதால், மற்றொன்று நான் தலையில் ஸ்கார்ஃப் அணிந்திருப்பதால் என்கிறார் அவர்.

என்றாலும் கடைசியில் எனது வெற்றி என்னை வலிமையுள்ளவளாக்குகிறது என்கிறார் அவர்.அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்கிலும், 2014இல் பாரீஸில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகளிலும் பங்கேற்க வேண்டும் என்பதுதான் எனது பிரமாண்ட கனவு, இலக்கு எல்லாம் என்கிறார் Zeina.அந்த கனவைக் காண அவர் தொடங்கியதுகூட இந்த பிப்ரவரியில்தான், காரணம், அந்த நேரத்தில்தான் சர்வதேச குத்துச்சண்டை அமைப்பு இஸ்லாமிய பெண்கள் தலையில் ஸ்கார்ஃபும், உடல் முழுவதும் மறைக்கும் வகையில் உடையும் அணிந்து குத்துச்சண்டையில் பங்கேற்கலாம் என்ற மாற்றங்களை விதிகளில் இணைத்தது.

ஒருவரின் விளையாடும் ஆர்வத்தைத்தான் பார்க்கவேண்டும், அவரது வெளித்தோற்றத்தை அல்ல என்று கூறும் Zeina, நீங்கள் உச்சம் தொடவேண்டுமானால் போராடித்தான் ஆகவேண்டும் என்கிறார்.

Sharing is caring!