குரோஷியாவிடம் தோல்வி எதிரொலி ரஷ்ய அணியிலிருந்து வெளியேறிய நட்சத்திர வீரர்

ரஷ்ய அணியின் நட்சத்திர வீரரான செர்ஜி இவானி ஷேவிச் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உலககோப்பை கால்பந்துதொடரை நடத்தும் ரஷ்யா இந்த முறை எப்படியாவது கோப்பையை கைப்பற்றி விட வேண்டும் என களத்தில் இறங்கியது.

கால் இறுதி வரை ஆடிய ரஷ்ய அணி குரோஷியாவிடம் மோதியது. சொந்த நாடு என்பதால் மைதானம் முழுக்க ரஷ்ய ரசிகர்கள் கூடியிருந்தனர். பலமான குரோஷியா அணி, ரஷ்யாவுக்கு இடமே கொடுக்காமல் அசத்தலாக விளையாடியது.

ஆனால், 31வது நிமிடத்தில் ரஷ்யாவின் செரிஷேவ் சூப்பர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார்.

ஆனால், குரோஷியா 39வது நிமிடத்தில், க்ராமாரிச் வழியாக கோல் அடித்து போட்டியை சமன் செய்தது.

அதன் பின் யாரும் கோல் அடிக்காமல் 90 நிமிடங்கள் முடிந்தது. பின்னர் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

அதில், குரோஷியா முதலில் கோல் அடித்தது. ஆனால், ஆட்டம் முடியும் வேளையில் ரஷ்யா மீண்டும் கோல் அடித்து 2-2 என சமன் செய்தது.

பின்னர் பெனால்டி ஷூட் வாய்ப்பு கிடைத்தது. அதில், குரோஷியா 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு பொறுப்பு ஏற்று நட்சத்திர வீரரான செர்ஜி இவானி ஷேவிச் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

Sharing is caring!