குற்றச்சாட்டுக்கு எதிராக தினேஷ் சந்திமால் செய்த மேன்முறையீடு

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக தினேஷ் சந்திமால் செய்த மேன்முறையீடு, அதனை விசாரணை செய்த நீதித்துறை குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதனைத் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தின் போது பந்தை சேதப்படுத்தியதாக தினேஷ் சந்திமால் மீது நடுவரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக தினேஷ் சந்திமாலுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், போட்டிக்கான பணத்தில் 100 வீதத்தை தண்டப் பணமாக செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக தினேஷ் சந்திமால் மேன்முறையீடு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!