குற்றாலத்தில் தோனி…வைரலாகும் வீடியோ

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை கபில் தேவ், சச்சின் தெண்டுல்கர் என ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒருவரை பிடிக்கும். ஆனால் மகேந்திர சிங் தோனிக்கு மட்டும் இந்த விதி பொருந்துவதில்லை. அவரை தலைமுறை இடைவெளியின்றி அனைவரும் ரசிக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

விளையாட்டைத் தவிர அவரது மேனரிசங்களுக்காகவே பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக எந்த ஒரு சிக்கலான நேரத்தையும் ‘கூலாக’ ஹேண்டில் செய்வது இவரது ஸ்டைல்.

விளையாட்டில் அதிரடியாக இருக்கும் தோனி சமூக வலைதளங்களில் பயங்கர ‘ஸ்லோ’. எப்போதாவது தான் சமூக வலைதள பக்கங்களில் தலை காட்டுவார். இந்நிலையில் அவர் தற்போது பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாகி வருகிறது. பின்புறம் திரும்பியவாறு அருவியில் குளிக்கிறார் தோனி.  முதலின் வேகமாகவும் பிறகு ஸ்லோ மோஷனிலும் இந்த வீடியோ எடிட் செய்யப் பட்டிருக்கிறது.

“ராஞ்சியை சுற்றி 3 அருவிகள் இருக்கும். தோணும் போதெல்லாம் அங்கு இதைத் தான் செய்வோம். இப்படி ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு மேலான நினைவுகளை மீட்டெடுத்தேன். இங்கு ஹெட் மசாஜ்ஜும் இலவசம்” என பதிவிட்டு அந்த வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார். இன்ஸ்டாவைத் தொடர்ந்து ட்விட்டரிலும் பகிரப் பட்ட இந்த வீடியோ தற்போது தாறுமாறு வைரல்! இன்னொரு முக்கியமான விஷயம் சமீபத்தில் குற்றாலத்திற்கு விசிட் செய்த தோனி, குற்றாலம் அருவியில் குளித்த வீடியோ தான் இது.

வீடியோ பார்ப்பதற்கு சொடுக்குக

Sharing is caring!