குவியும் வாழ்த்துக்கள்

நாக் அவுட் ரவுண்டில் ஜப்பான் அணியினர் பெல்ஜியம் அணியிடம் கடுமையாக சண்டையிட்டு கடைசி நிமிடத்தில் தோல்வியடைந்து பரிதாபமாக வெளியேறினர். இந்த தோல்வி அந்த நாட்டு மக்களின் கனவுகளை நொறுக்கியது.

இந்த தோல்வியிலும் ஜப்பான் அணியினர் உலகிற்கு ஒரு பாடத்தினை கற்றுக்கொடுத்து விட்டு சென்றுள்ளனர். ஜப்பான் வீரர்கள் தங்கியிருந்த அறையை மிக நேர்த்தியாக சுத்தம் செய்ததுடன் அந்த அறையில் ரஷ்ய மொழியில் `ஸ்பாசிபோ’ என அதாவது மிக்க நன்றி என எழுதி வைத்து சென்றனர்.

மற்ற நாடுகள் எல்லாம் தோல்வியடைந்த பிறகு அவர்களது உடைமைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அப்படியே வெளியேறினர்.

இதற்கு முன்னர் ஜப்பான் நாட்டினர் விளையாட்டு முடிந்த பிறகு மைதானத்தை சுத்தப்படுத்தினர்.

அப்போது ஜப்பான் நாட்டிற்கு பாராட்டுக்கள் குவிந்ததோடு, நடுநிலையாளர்கள் ஜப்பான் அணி இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என வேண்டிக் கொண்டனர் ஆனால் ஜப்பான் துரதிஷ்டவசமாக பெல்ஜியத்திடம் தோற்று வெளியேறியது.

இருந்தாலும் தங்களுடைய நாட்டின் கலாசாரமான தூய்மையை மறக்காத ஜப்பான் வீரர்களின் இந்த செய்கையை
உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.

Sharing is caring!