கூடைப்பந்து ஜாம்பவான் விபத்தில் கொல்லப்பட்டதன் காரணம் வெளியானது..!!!

அமெரிக்க கூடைப்பந்து ஜாம்பவான் கோபி பிரையன்ட், அவரது மகள் உள்ளிட்ட 8 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் மரணமடைய காரணம் இயந்திர கோளாறு அல்ல என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் சிக்கிய ஹெலிகொப்டர் பாகங்களையும், கண்காணிப்பு கமெராவில் சிக்கியிருந்த காட்சிகளையும் விரிவாக ஆய்வு செய்ததில், அவர்கள் பயணித்த ஹெலிகொப்டரானது இயந்திர கோளாறினால் விபத்தில் சிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

கோபி பிரையன்ட் பயணித்த ஹெலிகொப்டரானது சம்பவத்தின்போது மேகமூட்டத்தில் புகுந்ததாகவும், அதன் அடுத்த சில நொடிகளில் தீப்பிழம்பாக தரையில் பதித்துள்ளதாகவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனவரி 26 ஆம் திகதி கலிபோர்னியாவின் கலாபாசஸில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில் பிரையன்ட், அவரது 13 வயது மகள் கியானா மற்றும் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

இந்த குழுவானது பிரைண்டின் மாம்பா விளையாட்டு அகாடமியில் பெண்கள் கூடைப்பந்து போட்டிக்கு விரைந்து கொண்டிருந்தது.

கியானாவின் அணி பிரையண்டால் பயிற்றுவிக்கப்பட்டு போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!