கெரில் டோசருக்கு உயர் டிப்ளோமா கௌரவம்

சர்வதேச ஒலிம்பிக் குழுவினால் இலங்கையின் கெரில் டோசர், மகளிர் மற்றும் விளையாட்டு தொடர்பான உயர் டிப்ளோமா வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் குழுவினால் மகளிர் மற்றும் விளையாட்டு தொடர்பான உயர் டிப்ளோமா வருடாந்தம் பரிசளிக்கப்படுகின்றது.

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கீழ் உலகம் முழுதும் இயங்கும் தேசிய ஒலிம்பிக் குழுக்களால் பரிந்துரைக்கப்படுபவர்களுக்கு இந்த உயர் டிப்ளோமா பட்டம் பரிசளிக்கப்படுகிறது.

அதற்கு முதற்தடவையாக இலங்கை ஒலிம்பிக் குழு இம்முறை விண்ணப்பித்திருந்தது.

தாக்கல் செய்யப்பட்ட 6 விண்ணப்பங்களில் வலைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், மெய்வல்லுநர் ஆகிய விளையாட்டுக்களில் பல வருடங்களாக அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய கெரில் டோசர், உயர் டிப்ளோமா வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

விளையாட்டின் மகத்துவத்தை மேம்படுத்த ஆற்றிய சேவை உட்பட சமூக நலன்புரி விடயங்களுக்கு வழங்கிய பங்களிப்பிற்காக அவருக்கு இந்த வாய்ப்புக் கிட்டியது.

Sharing is caring!