கைதான இலங்கை கிரிக்கட் அணித்தலைவருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரட்ன இன்று இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொழும்பு, கின்சி வீதியில் நேற்று காலை இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் திமுத் கருணாரட்ன கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை அவர், கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது திமுத்தின் சாரதி அனுமதி பத்திரத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.அத்துடன், திமுத்தை இரண்டு சரீரப்பிணையில் செல்ல அனுமதியும் வழங்கியுள்ளார்.

Sharing is caring!