கொரியா ஓபன் பேட்மிண்டன் கால் இறுதியில் சாய்னா

கொரியா ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிக்கு சாய்னா நெஹ்வால் முன்னேறி உள்ளார்.நேற்று நடந்த 2ம் சுற்றுப் போட்டியில் சாய்னா நெஹ்வால், தென் கொரியாவின் கிம் கா இன்னை எதிர்த்து விளையாடினார்.

இப்போட்டியில் அபாரமாக ஆடிய சாய்னா 37 நிமிடத்தில் 21-18, 21-18 என்ற நேர் செட்களில் வெற்றி  பெற்றார். அடுத்த சுற்றில் அவர், 3ம் நிலை வீராங்கனையும், கடந்த ஆண்டு உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொள்கிறார்.

Sharing is caring!