கொரோனாவால் ஐபிஎல் தொடர் நிறுத்தப்படுகிறதா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், ஐபிஎல் தொடர் நடக்குமா? நடக்காது என்ற கேள்விக்கு கங்குலி விளக்கமளித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இப்போது இந்தியாவிற்குள்ளும் புகுந்துவிட்டது. தற்போது வரை இந்த வைரஸ் காரணமாக 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதில் 13 பேர் இத்தாலியில் இருந்து இந்தியாவிற்கு வந்த சுற்றுலாப்பயணிகள் என்று கூறப்படுகிறது. இந்த வைரஸ் எளிதாக மனிதர்களிடமிருந்து பரவுவதால், டெல்லி போன்ற நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

அதோடு பொதுநிகழ்ச்சிகள், மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்த மாதத்தின் கடைசியில் ஐபிஎல் தொடர் துவங்கவிருக்கிறது. இதற்காக மைதானத்தில் ரசிகர்கள் ஒன்றாக கூடுவார்கள், இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படலாம் என்ற காரணத்தினால் ஐபிஎல் தொடர் நிறுத்தப்படலாம் என்ற தகவல் வெளியானது.

இந்த தகவலால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.

இந்நிலையில் இது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஐபிஎல் போட்டிகள் பிரமாதமாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

மொத்தம் 85 நாடுகளில் பரவியுள்ளது இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது, வெளிநாடுகளிலிருந்து வருவோர் மூலம் பரவுவதால் ஐபிஎல் போட்டிகளைக் காண அயல்நாடுகளிலிருந்து வருவோர் மூலம் வைரஸ் பரவினால் என்ன செய்வது என்ற போது, பரவாமல் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுமோ அது எடுக்கப்படும்.

ஐபிஎல் நடக்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஐபிஎல் நடக்கும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இத்தாலியில் சீரி ஏ கால்பந்து போட்டிகள் ரசிகர்கள் இல்லாமலேயே மூடப்பட்ட கதவுகளுக்குள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!