கொரோனாவின் தொடர் தாக்கத்தினால் ஐபிஎல் தொடரை நடத்துவதில் மீண்டும் ஏற்பட்டுள்ள சிக்கல்!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரில் சிறிய சிக்கல் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே, அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓரளவிற்கு பரவாயில்லாமல் இருப்பதன் காரணமாகவே, இந்தியாவில் நடக்க வேண்டிய ஐபிஎல் தொடர் அங்கு நடத்த திட்டமிடப்பட்டது.இதையடுத்து தொடருக்காக வீரர்களின் வருகை, மைதானத்தை சரி செய்தல் போன்ற ஐபிஎல்லுக்கான வேலைகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.

இன்னும் போட்டி துவங்குவதற்கு சில நாட்களே இருப்பதால், அட்டவணை இன்று வரை அறிவிக்கப்படவில்லை. இதனால் வேறு ஏதும் காரணமா என்று பார்த்த போது, இதற்கும் கொரோனா தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தில், துபாய் ஷார்ஜா அபுதாபி ஆகிய மூன்று மைதானங்களில் தான் ஐபிஎல் தொடருக்கான அனைத்து போட்டிகளிலும் நடைபெறவுள்ளது.

இதில், தற்போது அபுதாபியில் கொரோனா வைரஸ் வெகு தீவிரமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் இங்கு போட்டியை நடத்துவதற்கு கடும் பாதுகாப்பு வேலைகள் எல்லாம் நடந்து வருகின்றன.

Sharing is caring!