கொரோனாவுக்கு பலியான முதல் சுமோ மல்யுத்தவீரர்..!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இளம் சுமோ மல்யுத்த வீரர் உயிரிழந்தமை ஜப்பானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் பாரம்பரிய மல்யுத்த விளையாட்டான சுமோ, கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஐந்து வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் ஒருவர் தான் இப்போது உயிரிழந்துள்ளார்.

பலியான சுமோ வீரரின் பெயர் ஷோபுஷி என்பதாகும். அவரது வயது 28 மட்டுமே. அவர் மூன்றாம் நிலை சுமோ வீரர் ஆவார். அவருக்கு கடந்த மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏப்ரல் 8ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏப்ரல் 19 அன்று தீவிர சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். பின்னர் அவரது உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கத் தொடங்கின. பல உறுப்புகளும் செயலிழந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

நல்ல உடல் உறுதி கொண்ட இளம் மல்யுத்த வீரர் ஒருவர் பலியாகி இருப்பது ஜப்பானில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

Sharing is caring!