கொரோனா தொற்றுடன் இலங்கையில் அடையாளம் காணப்பட்டவர் மொயின் அலி!

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட உருத்திரிபடைந்த கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி என்பது தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பரவும் உருத்திரிபடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளான ஒருவர், இலங்கையில் அடையாளம் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தொற்றிற்குள்ளானவர் இலங்கைக்கு வந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இங்கிலாந்து சகலதுறை வீரர் மொயின் அலி கடந்த திங்கட்கிழமை (4) கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!