கோலி எடுத்த தப்பான முடிவு.. இவ்ளோ மோசமான தோல்விக்கு அதுதான் காரணம்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுமோசமான தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு முக்கிய காரணம், கேப்டன் விராட் கோலி எடுத்த முடிவு தான் என ரசிகர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இந்தப் போட்டியில் கோலி கூடுதல் பந்துவீச்சாளர் இல்லாமலும், பேட்டிங் வரிசையை மாற்றியும் பரிசோதனை முயற்சிகளை செய்தார். அது வினையாக முடிந்தது.

 இந்தியா பேட்டிங் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 255 ரன்கள் எடுத்தது. தவான் 74, ராகுல் 47 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடினர். மற்ற வீரர்கள் பேட்டிங்கில் அணியைக் கைவிட்டனர்.
ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை அதே போல, பந்துவீச்சில் ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஆடிய இந்திய அணியால், ஆஸ்திரேலிய அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை. படுமோசமான தோல்வி ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்திய அணி படுமோசமான தோல்வியை சந்தித்தது. இதற்கு கேப்டன் கோலி, அணித் தேர்வில் செய்த தவறான முடிவுகளால் ஏற்பட்ட குழப்பமே காரணம். அந்த கேள்வி இந்த தொடருக்கு முன் இந்திய அணியில் ரோஹித் சர்மா, ராகுல், தவான் என மூன்று துவக்க வீரர்களும் நல்ல பார்மில் இருந்தனர்.

Sharing is caring!