கோஹ்லி அடித்த 360 டிகிரி ஸ்கூப் ஷாட்டை பார்த்து டிவில்லியர்ஸ் என்ன சொன்னார் தெரியுமா?

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டி20 போட்டியில் ஸ்கூப் ஷாட் குறித்து, டிவில்லியர்ஸ்க்கு மெசேஜ் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி சிட்னியில் நடைபெற்றது. இப்போடியில் முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 194 ஓட்டங்கள் குவிக்க, அடுத்து ஆடிய இந்திய அணி, இந்த இலக்கை அசால்ட்டாக எட்டிப் பிடித்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் தொடரையும் கைப்பற்றியது, இப்போட்டியில் இந்திய அணியின் தலைவரான கோஹ்லி, 24 பந்தில் 40 ஓட்டங்கள் குவித்தார்.

இதில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும், அதில் கோஹ்லி அடித்த ஒரு சிக்ஸர் டிவில்லியர்ஸை அப்படியே கண்முன் கொண்டு வந்தது.

இது குறித்து கோஹ்லி கூறுகையில், இந்த போட்டியில் நான் ஏ.பி.டி போன்று ஒரு ஸ்கூப் ஷாட்டை விளையாடினேன். எனக்கே இந்த ஷாட் விளையாடியது சர்பிரைஸ்ஸாக இருந்தது. போட்டி முடிந்து இது குறித்து ஏ.பி. டிவில்லியர்ஸ்க்கு மெசேஜ் செய்ய உள்ளேன். அவர் என்ன நினைக்கிறார் என்று தெரிய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வீடியோவைப் பார்த்த டிவில்லியர்ஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அருமையான ஷாட் என்பது போல் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!