கௌதம் கம்பீர் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு

இந்திய அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கௌதம் கம்பீர் (Gautam Gambhir) சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியா 2015 ஆம் ஆண்டு உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரில் சம்பியன் பட்டம் வெல்வதற்கு முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கௌதம் கம்பீர் பாரிய பங்காற்றினார்.

2007 ஆம் ஆண்டு சர்வதேச இருபதுக்கு 20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியா சம்பியானவதற்கும் கௌதம் கம்பீரின் பங்களிப்பு அளப்பரியதாகக் காணப்பட்டது.

2004 ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகம் பெற்ற கௌதம் கம்பீர், இந்தியாவுக்காக 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,154 ஓட்டங்களை குவித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு இங்கிலாந்து எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான கௌதம் கம்பீர், இந்தியாவுக்காக ஒருநாள் அரங்கில் 5,238 ஓட்டங்களைப் பெற்றார்.

37 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள கௌதம் கம்பீர் அதில் 7 அரைச்சதங்களுடன் 932 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

எவ்வாறாயினும், 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய ஒருநாள் அணியிலும் 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியிலும் கௌதம் கம்பீருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்தநிலையில், 2009 ஆண்டு ஆண்டின் அதிசிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை கௌதம் கம்பீர் வென்றிருந்தமையும் இவ்விடத்தில் நினைவுகூரத்தக்கது.

5 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 5 சதங்களை விளாசியுள்ள ஒரே ஒரு இந்திய துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!