சக வீரர்களை தொடர்ச்சியாக ஆட்டமிழக்க செய்யும் இந்திய வீரர்!!

இந்திய அணியின் சகலத்துறை வீரரான ரவீந்திர ஜடேஜா எதிரணி வீரர்கள் அல்லாமல் சக வீரர்களையும் ரன் அவுட் செய்வதில் வல்லவராக இருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

அவுஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் சிட்னியில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித்தை சிறப்பான த்ரோவால் ரன் அவுட் செய்தார் ஜடேஜா. இந்த ரன் அவுட் அனைவராலும் பரவலாகப் பாராட்டப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இந்திய அணியின் துடுப்பாட்டத்தின்போது ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜாஸ்பிரீத் பூம்ரா ஆகியோரது ரன் அவுட்டுக்கும் ஜடேஜா காரணமாகத் திகழ்ந்துள்ளார்.

ஓட்டங்கள் சேர்ப்பதில் வல்லவராகத் திகழும் ஜடேஜா, எதிர் திசையில் உள்ள துடுப்பாட்ட வீரர்களின் ஓட்டங்கள் சேர்க்கும் திறன்களை மறந்துவிடுகிறாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதுவரை 73 டெஸ்ட் இன்னிங்ஸில் விளையாடியுள்ள ஜடேஜா 20 முறை ரன் அவுட்டுக்குக் காரணமாக இருந்துள்ளார்.

இதில் 13 முறை எதிர் திசையிலுள்ள வீரர்கள் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்துள்ளனர். 7 முறை மட்டுமே ஜடேஜா ரன் அவுட் ஆகியுள்ளார்.

இதைக் கணக்கிட்டால் ஒவ்வொரு 3.5 இன்னிங்ஸுக்கு ஒரு முறை ரன் அவுட்டுக்குக் காரணமாக இருக்கிறார் ஜடேஜா.

Sharing is caring!